Living in Switzerland – Information and counselling online  

நேரடி அறிவுரை

நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு அறிவுரையோ அல்லது குறிப்புரைகளோ  தேவையென்றால், நீங்கள் உங்களது மொழியில website ஊhடாக மின்னஞ்சல் அனுப்பலாம். பயிற்றப்பட்ட  migraweb உத்தியோகத்தர்களும்,தொண்டர்களும் தனிப்பட்டமுறையில் உங்களதுமின்னஞ்சல் கேள்விகளுக்கு நம்பகமான முறையில் அறிவுரை தருவர். நீங்கள் பெயர் குறிப்பிடாமல் இருக்கவும் முடியும்,ஆனால் நாங்கள் நேரடி தொடர்பின் முக்கியத்துவத்தை அடையாளம் காணுகிறோம். எங்கள் சேவை உதவியும்,அறிவுரையும் தரமுடியுமே தவிர மருத்துவஆலோசனையோ அல்லது முக்கியசட்டஆலோசனையோ தரமுடியாது.

எவராவது மிகவும் கஷ்ரங்களோ அல்லது முக்கிய நபர்களை சந்திபதற்கோ முடியவில்லையென்றால் நாங்கள் அறிவுரை கூறுகிறோம். உங்களது கேள்வியை எங்களுக்கு எழுதுங்கள்,உங்களது முதலாவது மின்அஞ்சலுக்கு 48மணித்தியாலத்திற்குள் பதில் அனுப்புவோம். நாங்கள் நேரத்திற்கு பதில் அனுப்ப முடியாவிட்டால், உங்களுக்கு எப்பொழுது பதில் கிடைக்கும் என்று எழுதிஅனுப்புவோம்.உடனே பதில் தேவை என்றால் உதவிக்கரம் (Die Dargebotene Hand / La Main Tendue ) என்னும் சங்கத்திற்க்கு 143 என்ற எண்ணை அழைத்தால் பதில் கிடைக்கும். இது சுவிற்சலாந்து (லிற்ச்ரென்ஸ்ரென்) (Lichtenstein) ஆகிய இடங்களில் யேர்மன், பிரஞ்சு, இத்தாலியன் மொழிகளில் நடாத்தபடும் 24 மணி தொலைபேசி சேவையாகும்.

மின்னஞ்சல் அனுப்புவதற்கு  முதலில் Webline இல் பதிவு செய்யவும், பின் பாவிப்பதற்கு எங்கள் நிபந்தனைகளை வாசிக்கவும், அதன் பின் உங்களது மொழியில் செய்தியை அனுப்புங்கள்.

ஆலோசனை

Login



Register